தேர்தல் நேரத்தில் ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகத்தை எழுப்புகிறது: கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சனம்

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2024-03-09 18:03 GMT

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது;

"விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது. பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்