தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிவகாசி மாநகராட்சி பகுதியில்தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2023-09-09 18:45 GMT

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அச்சம் அடைகிறார்கள். சில இடங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நாய்கள் துரத்தி கடிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுட்டிக்காட்டியும் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த தெரு நாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 9 ஆண்டுகளாக நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக விஸ்வநத்தம் மார்க்கெட் அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடமும் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் சிவகாசி பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் நடமாடுகிறது. இவற்றை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தெரு நாய்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கையை சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்