டிராலி மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது
தென்மலை அருகே டிராலி மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.
செங்கோட்டை:
புனலூர்-செங்கோட்டை ெரயில்வே வழித்தடத்திற்கு இடையே உள்ள தென்மலை ெரயில் நிலையம் அருகே ெரயில் தண்டவாளத்தில் ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது. தகவல் அறிந்ததும் ெரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்றனர். பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி ெரயில் போக்குவரத்தை சீரமைத்தனர்.
தொடர்ந்து ெரயில்வே ஊழியர்கள் தாங்கள் சென்ற டிராலி போன்ற வாகனத்தை தண்டவாளத்தின் ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு மற்ற பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில், டிராலி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த வாகனம் தூக்கி வீசப்பட்டதில் பயங்கர சத்தம் கேட்டதால் என்ஜின் டிரைவர் ெரயிலை நிறுத்தினார். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.
பின்னர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு ெரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக ெரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.