கரூருக்கு முதல் முறையாக வருகை தந்த அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

தி.மு.க. மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று கரூருக்கு முதல் முறையாக வருகை தந்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-02 19:44 GMT

அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

கரூர் தி.மு.க. மாவட்ட செயலாளராக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று கரூருக்கு நேற்று முதல் முறையாக வருகை தந்த மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு கரூர் ரவுண்டானா அருகே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து கரூர் ரவுண்டானா அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும் மற்றும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், கருணாநிதி ஆகியோரின் திருஉருவப்படத்திற்கும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு உறுப்பினர் அன்பரசு, கரூர் மாநகர கழகச் செயலாளர் கனகராஜ், மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மத்திய கிழக்கு மாநகர பகுதி செயலாளர் ராஜா, கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பசுவை சக்திவேல், 12-வது வார்டு கழகச் செயலாளர் இளங்கோ, 19-வது வார்டு கழக செயலாளர் மதியழகன், 11-வது வார்டு கழக செயலாளர் பழனிகுமார், 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லாரன்ஸ், 35-வது வார்டு கழகச் செயலாளர் சிவக்குமார், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அருள்மணி கனகராஜ், 35-வது மாமன்ற உறுப்பினர் இந்திராணி, 38-வது வார்டு கழகச் செயலாளர் முருகானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் வாழ்த்து

இதனையடுத்து கரூர் சின்ன கொங்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்