சின்ன முதலியார் சாவடி மசாஜ் சென்டரில் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் சீண்டல் ஊழியர் கைது

சின்ன முதலியார் சாவடி மசாஜ் சென்டரில் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் சீண்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-01 18:45 GMT

வானூர், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலியார் சாவடி கடற்கரை பகுதியில் தங்கும் விடுதி மற்றும் மசாஜ் சென்டர்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகள் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

இந்தநிலையில் புதுச்சேரி மற்றும் ஆரோவில் பகுதிகளுக்கு சுற்றுலா வந்த அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண் மசாஜ் செய்வதற்காக சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றார்.

பாலியல் சீண்டல்

அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ரெக்கீஸ், அந்த பெண்ணின் உடலில் ஆயில் தடவி மசாஜ் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் அமெரிக்க பெண் புகார் செய்தார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப்பதிவு செய்து மசாஜ் சென்டர் ஊழியர் ரெக்கீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்