ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
கண்டாச்சிபுரம் அருகே ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கண்டாச்சிபுரம்,
கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஏரி தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.