தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்; தென்னை, வாழை சேதம்

தோட்டத்தில் புகுந்த யானை தென்னை, வாழைகளை சேதப்படுத்தியது.

Update: 2022-07-11 21:59 GMT

தாளவாடி

ஆசனூர் அருகே உள்ள ஒங்கல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கப்பா (வயது56). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வாழை மற்றும் தென்னை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை சிவலிங்கப்பாவின் தென்னந்தோப்புக்குள் புகுந்தது. அங்கு தென்னங்குருத்துகளை தின்றும், சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்களை மிதித்தும் நாசப்படுத்தின. பின்னர் வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு வாழை குருத்துகளை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்தின. இதில் மொத்தம் 200-க்கு மேற்பட்ட வாழைமரங்கள் சேதமாகின. பின்னர் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்