ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனம்

ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-21 16:27 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ‌ மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''ஆண்களுக்கான இலவச புதிய, எளிய, நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் வேலூர் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பாக வருகிற 4-ந் தேதி வரை திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் நடைபெற உள்ளன. கருத்தடை சிகிச்சைக்குப்பின் அரசு வழங்கும் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ.5,100 மற்றும் ஒரு மூட்டை அரிசி வழங்கப்படும். மேலும், இக்கருத்தடை சிகிச்சை கத்தியின்றி, ‌ ரத்தமின்றி, தையலின்றி, தழும்பின்றி புதிய எளிய நவீன முறையில் செய்யப்படும்.

கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் தகுதி வாய்ந்த ஆண்கள் 9486130650, 9443661155, 6369188112, 9894795689, 0416-2221322 ஆகிய போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். இந்த சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து நாட்களிலும் இலவசமாக செய்யப்படுகிறது'' என்றார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநர் (பொது சுகாதார பணிகள்) மணிமாறன், இந்தியன் ரெட் கிராஸ் சங்க செயலாளர் ரகுராமன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்