பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Update: 2022-10-17 19:16 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சோளிங்கர் தீயணைப்புத்துறையினர் சார்பில் நிலைய அலுவலர் விநாயகம் தலைமையில் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் முறைகள், தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தீவிபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவது என்பது குறித்தும், தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு முதலில் தகவல் கொடுப்பது குறித்தும், பாதிகக்ப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்வது எப்படி என்பது பற்றி விளக்கி துண்டுப்பிரசுரங்கள் வழங்கி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுதத்தினர்.

தலைமை ஆசிரியர் மேரிஷேரின் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சோளிங்கர் பஸ் நிலையத்தில் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள், கடைகள மற்றும் பொதுமக்களுக்கு தீ மற்றும் விபத்து குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்