கவர்னரின் உருவபொம்மையை எரிக்க முயற்சி

கவர்னரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-10 18:09 GMT

தமிழக சட்டசபை கூட்டத்தின்போது கவர்னர் ஆர்.என்.ரவி தலைவர்கள் பற்றி குறிப்பிடாததை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக அதன் நிர்வாகிகள் நேற்று காலை குவிந்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அன்பு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி கமலக்கண்ணன் தமிழக கவர்னரின் உருவ பொம்மையை, எரிப்பதற்காக தூக்கி வந்தார். இதைக்கண்ட போலீசார் அவரிடம் இருந்த உருவபொம்மையை கைப்பற்றினர். இதேபோல் மற்ற நிர்வாகிகள் வைத்திருந்த கவர்னரின் உருவப்படங்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் சிலர் கவர்னரின் உருவப்படங்களை கிழித்து கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்ெதாடர்ந்து கவர்னரின் உருவபொம்ையை எரிக்க முயன்றதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்