டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு திருட முயற்சி
பெரும்புலிபாக்கம் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு திருட முயற்சி செய்த நபர்கள்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக நந்தகுமார் பணிபுரிந்து வருகிறார். விற்பனையாளர்களாக தனஞ்செழியன், ஏழுமலை ஆகியோர் வேலைபார்க்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் டாஸ்மாக் கடை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று மதியம் விற்பனையாளர்கள் இரண்டு பேரும் கடையை திறக் வந்தபோது கடையின் பின் பக்கத்தில் மர்ம நபர்கள் துளையிட்டு திருட முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனையாளர்கள் கடையை ஆய்வு செய்த போது கடையில் 38 பீர் பாட்டில்கள் உடைத்து நொருக்கப்பட்டிருந்தது.
மதுபாட்டில்கள் திருட்டு போகவில்லை. இது தொடர்பாக மேற்பார்வையாளர் நந்தகுமார் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.