ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

Update: 2023-07-07 19:47 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் அம்பேத்கர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சியின் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் வெளியேறும் பகுதியில் தனிநபர் ஒருவர் மண்ணை கொட்டி கால்வாய் அமைப்பதற்கு இடையூறு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.களத்தூர் போலீசில் பிம்பலூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட நேற்று 20-க்கும் மேற்பட்டோர் வேப்பந்தட்டை வந்தனர். அப்போது அவர்களை போலீசார், ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு தடுத்து நிறுத்தி 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்