மானாமதுரை
மானாமதுரை நாகலிங்க நகரில் உள்ள மெக்கநாச்சி அம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. யாகசாலைகளில் புனித நீர் அடங்கிய குடங்களை வைத்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
நேற்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு 11 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, புனித நீரை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார, தீபாராதனை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், நமச்சிவாயம் ஆகியோர் செய்திருந்தனர்.