சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன் வைகாசி விசாகத் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.