அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை-கருத்தரங்கில் தீர்மானம்

அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-06-11 18:30 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட புரட்சியாளர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபாதை வியாபாரிகளின் உரிமை விளக்க கருத்தரங்கம் நேற்று நடந்தது. பெரம்பலூர் வெங்கடேசபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடந்த கருத்தரங்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேஷ், செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயலாளர் பேரறிவாளன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல் அணியின் மாநில துணை செயலாளர் சீனிவாசராவ் ஆகியோர் கலந்து கொண்டு நடைபாதை வியாபாரிகளின் உரிமைகளை விளக்கி பேசினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளரும், கவுன்சிலருமான தங்க.சண்முகசுந்தரம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் பெரம்பலூர் ஒன்றிய அமைப்பாளர் பால் நிலவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கில் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பெரம்பலூர் நகர்ப்பகுதியில் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரிகளுக்கு சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. நடைபாதை வியாபாரிகளிடம் அத்துமீறும் நகராட்சி ஊழியர்கள், போலீசார் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். சங்கத்தின் அடுத்த கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். முடிவில் அன்புசெல்வி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்