ஆழ்வார்திருநகரி பள்ளியில்மாணவர் திறன்காண் போட்டி
ஆழ்வார்திருநகரி பள்ளியில் மாணவர் திறன்காண் போட்டி நடத்தப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி தூ.நா.தி.அ.க நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர் திறன் காண் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி தாளாளர் அருமைத்துரை தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவி சாரதா பொன்இசக்கி முன்னிலை வகித்தார். சிலம்பம் கராத்தே மாஸ்டர் முத்துமாலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவி பரிசுகளை வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.