முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அனந்தபுரத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-20 18:45 GMT

செஞ்சி:

அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1996-ம் ஆண்டு பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் 27 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன் மற்றும் மூத்த ஆசிரியை கோவிந்தம்மாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மாணவர்கள், தங்களுடைய பழைய நினைவுகளையும், தற்போதைய நிலை குறித்தும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஜெயந்தி, ராஜா, கன்னியப்பன், அலெக்ஸ், இமாம், காசிம், ராஜதுரை, கிஷோர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் முன்னாள் மாணவர் பொன்னங் குப்பம் பிரசன்னா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்