முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-13 19:00 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களின் சங்க கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் பேரூராட்சி துணை தலைவி மகேஸ்வரி முருகப்பெருமாள் வரவேற்று பேசினார்.

முன்னாள் மாணவர் சந்தானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளியின் முன்னாள் ஆசிரியை ப.திருமலை, முன்னாள் ஆசிரியர் க.நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகக்குழு தலைவராக ஞானதுரை, செயலராக ப.புஹாரி, பொருளாளராக குப்புசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரி ராம்குமார், ராஜலட்சுமி, முருகன் கேசவன், கமல் செல்வி, முன்னாள் மாணவர்கள் ரெம்சியஸ், ராதாகிருஷ்ணன், கார்த்திக், மதிமாறன், ஜமால், ஆசிரியர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்