காங்கிரசில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திண்டுக்கல் நாகல்நகர் சந்தைபேட்டையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-17 20:00 GMT

காங்கிரஸ் கட்சி சார்பில், திண்டுக்கல் நாகல்நகர் சந்தைபேட்டையில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாநகர தலைவர் துரைமணிகண்டன் தலைமை தாங்கினர். தெற்கு பகுதி செயலாளர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார். இதில், கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

இதில், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வேங்கைராஜா, அபுதாகீர், துணைத்தலைவர் அப்துல்ரகுமான், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை, நிலக்கோட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் கோகுல்நாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் சபியுல்லா, மாவட்ட பொருளாளர் நடராஜன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 47-வது வார்டு தி.மு.க. முன்னாள் வார்டு செயலாளர் சாகுல் அமீது தலைமையில் 46-வது வார்டு முன்னாள் அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் நிர்வாகிகள் அக்கீம், அஜித், அப்துல் ரகுமான் உள்பட பலர் அந்த கட்சியில் இருந்து விலகி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இதையடுத்து 47-வது வார்டு முன்னாள் செயலாளர் சாகுல் அமீதுக்கு கே.எஸ்.அழகிரி சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்