மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கோவில்பட்டியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-07-16 19:00 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மகளிர் அணி கோமதி, மூப்பன்பட்டி கிளை செயலாளர் முருகன் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியினர் அ.ம.மு.க. இளைஞரணி துணை செயலாளர் மகேஸ்வர பாண்டியன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காமராஜர் பேரவையின் சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

பேரவை தலைவர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் அமிர்தராஜ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், காமராஜர் படத்தை திறந்து வைத்தார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்