இரட்டை வழி பாதை பணிக்காக நெல்லை ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

இரட்டை வழிபாதை பணிக்காக நெல்லை ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-09-14 20:32 GMT

இரட்டை வழிபாதை பணிக்காக நெல்லை ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மதுரை -புனலூர் ரத்து

நெல்லை -நாகர்கோவில் -திருவனந்தபுரம் இடையே இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நாகர்கோவில் -இரணியல் நிலையங்களுக்கு இடையே பாலம் கட்டுமான பணி நடைபெறுகிறது.

இதற்காக மதுரை -புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16729) வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை), 22-ந்தேதி, 26-ந்தேதி மற்றும் 29-ந்தேதி ஆகிய 4 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் புனரூர் -மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (16730) 20-ந்தேதி, 23-ந்தேதி, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 4 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை -நாகர்கோவில்

இதுதவிர நெல்லை -நாகர்கோவில் வழித்தடத்தில் வள்ளியூர் -நாங்குநேரி நிலையங்களுக்கு இடையே வருகிற 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகளும் நடைபெற உள்ளது. இதையொட்டி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் -நெல்லை முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் 25-ந்தேதியும், நெல்லை -நாகர்கோவில் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் 26-ந்தேதியும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து

தாம்பரம் -நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 9 நாட்களுக்கு நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் -தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்களுக்கு நாகர்கோவில் -நெல்லை இடையே ரத்து செய்யப்பட்டு நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட்டு செல்லும்.

திருவனந்தபுரம் சென்ட்ரல் -திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நெல்லை -திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரல் -நாகர்கோவில் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறு மார்க்கத்தில் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த ரெயில் நாகர்கோவிலுக்கு பதிலாக நெல்லையில் இருந்து புறப்பட்டு செல்லும்.

புதுச்சேரி -கன்னியாகுமரி வாரந்திர ரெயில் 25-ந்தேதி நெல்லை வரையும், மறுமார்க்கத்தில் 26-ந்தேதி (திங்கட்கிழமை) நெல்லையில் இருந்தும் புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்