மேலும் 2 பெண்களிடம் நகை திருட்டு

மேலும் 2 பெண்களிடம் நகை திருட்டு

Update: 2023-02-03 18:45 GMT

கோட்டூர்

பொள்ளாச்சி அருகே சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவிற்கு சென்ற கோட்டூரை சேர்ந்த சிவபாக்கியம்(வயது 65) என்பவரிடம் 5 பவுன் நகையை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டதாக தெரிகிறது. இதேபோன்று பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த துளசியம்மாள்(72) என்பவரிடம், 3 பவுன் நகை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதே கோவில் விழாவில் அங்கலகுறிச்சியை சேர்ந்த பழனாத்தாள் என்பவரிடம் 5 பவுன் நகையை திருடிய மதுரை மாவட்டம் முத்துபட்டியை சேர்ந்த மது(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடன் வந்த மேலும் 2 பேர் நகை திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்