திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

Update: 2022-12-10 18:45 GMT

திருவட்டார், 

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

வெள்ளப்பெருக்கு குறைந்தது

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 5 நாட்களாக இதே நிலை நீடித்ததால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனை அறியாமல் திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் அதிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

அருவியில் குளிக்க அனுமதி

இதனை தொடர்ந்து நேற்று மதியம் முதல் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்தினர் அனுமதி அளித்தனர். தடை விலக்கப்பட்டதால் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

விடுமுறை நாள் என்பதால் மாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்ததை காண முடிந்தது. மேலும் அங்கு குளு, குளு சீசனும் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அந்த இதமான சூழலை ரசித்த னர். பின்னர் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகையால் திற்பரப்பு அருவி மீண்டும் களை கட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்