உணவில் போதை பொருள் கலந்து இளம்பெண் பலாத்காரம் - 65 பவுன் நகைகளையும் பறிகொடுத்ததாக புகார்
உணவில் போதை பொருள் கலந்து இளம்பெண் பலாத்காரம் , 65 பவுன் நகைகளையும் பறிகொடுத்ததாக போலீசில் புகார் அளித்தார்;
மதுரை மானகிரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற அமரன். தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு, 27 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிைலயில், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார், உணவில் போதை மருந்தை கலந்து அந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளார். பின்னர் மயக்கம் அடைந்த அந்த பெண்ணை, அவர் பலாத்காரம் செய்ததாக, அந்தபெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபோல் என்னிடம் இருந்த 65 பவுன் நகைகளையும் மிரட்டி பறித்துவிட்டார் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து. நகைகளை மீட்க வேண்டும் எனவும் புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில், போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.