ஆலடி அருணா லிபரல் கலைக்கல்லூரி திறப்பு

ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலைக்கல்லூரி திறக்கப்பட்டது.

Update: 2023-07-23 19:38 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நெல்லை தென்காசி நெடுஞ்சாலையில் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, ஆலடி அருணா அறக்கட்டளை நிறுவனர் பாலாஜி ஆகியோர் வரவேற்று பேசினர்.

தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கினார். நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்து, புதிய கல்லூரியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றினார். நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி சந்திரபோஸ், தென்காசி நகராட்சி தலைவர் சாதிக், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டலம் மற்றும் தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்