விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க முப்பெரும் விழா வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு

விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க முப்பெரும் விழா நடந்தது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

Update: 2022-06-26 16:49 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கத்தின் பொன்விழா ஆண்டு விழா, முன்னாள் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு நகர அனைத்து வர்த்தகர் சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாநில துணை தலைவர் பழமலை, மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாள ராஜ மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மணிவண்ணன் தீர்மானங்களை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் மற்றும் அகில இந்திய தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு, தலைவர் சண்முகம், செயலாளர் வாசு சுந்தரேசன், பொருளாளர் ஜலந்தர தாஸ் மற்றும் முன்னாள் நிர்வாகிகளை பாராட்டி பேசினார் மேலும் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசினார். தொடர்ந்து நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கத்தின் புதிய தலைவராக கோபு, செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக கோல்டன் சேட்டு முகமது ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் பெருகி வருவதால் நம்முடைய உள்ளூர் வியாபாரிகள் நலன் கருதி, அவர்களது வணிகத்தை கருத்தில் கொண்டு அனைவரும் இன்று முதல் நமது ஊரில் உள்ள வணிகர்களிடம் நமக்கு தேவையான பொருட்களை வாங்குவோம் என உறுதிமொழி ஏற்பது, விருத்தாசலம் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, திட்டக்குடி ராஜன், தங்கராசு மற்றும் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள், வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் ஜெய்சங்கர் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்