விடுமுறையை ஈடுசெய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்...!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-20 10:44 GMT

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அளித்தது. 5 நாட்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டதால் அதனை ஈடுசெய்ய சனி கிழமைகளில் பள்ளிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் முழு பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்