அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் தமிழக கவர்னரை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-12 19:00 GMT

தேனி பழைய பஸ் நிலையம் அருகில், அனைத்துக் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்