அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்க கூட்டம்

தேனியில், அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-01-10 16:40 GMT

தமிழ்நாடு இரவு பறவைகள் அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடந்தது. இதற்கு தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் வேல்முருகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்