அனைத்து துறை சார்ந்த செயலாக்க ஆலோசனைக்கூட்டம்
அனைத்து துறை சார்ந்த செயலாக்க ஆலோசனைக்கூட்டம்
போடிப்பட்டி
மடத்துக்குளம் வட்டாரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து செயலாக்க கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.தங்கராஜ் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.