மேலூர் அரசு ஆஸ்பத்திரி குழாய் உடைப்பு சீரமைப்பு

மேலூர் அரசு ஆஸ்பத்திரி குழாய் உடைப்பு சீரமைப்பு செய்யப்பட்டது.

Update: 2023-05-14 18:45 GMT

மேலூர், 

மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் நோயாளிகள் வார்டில் கழிவறையில் உள்ள குடி நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதனையடுத்து மேலூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ஜெயந்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. நோயாளிகள் கை கழுவும் தண்ணீர் தொட்டியில் சாப்பாட்டு கழிவுகளை கொட்டி விடுகின்றனர். இதனால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதாகவும், அது உடனே சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தலைமை மருத்துவர் ஜெயந்தி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்