சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தவிர சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.