மது விற்றவர்கள் கைது

மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-21 19:01 GMT


துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திருத்தலையூர் பஸ் நிறுத்தம் அருகில் அதே ஊரை சேர்ந்த குண்டு என்கிற கிருபாகரன் (வயது 45), மணப்பாறை பூ மார்க்கெட் அருகில் ஆரிப்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி (40), துறையூர் ஏரிக்கரை அருகே மருவத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த பெரியசாமி (52), காலியா பாளையம் குடித் தெருவை சேர்ந்த ராஜேஷ் குமார் (40) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்