மதுவிற்ற பெண் கைது

குடியாத்தம் அருகே மதுவிற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-06-03 14:05 GMT

குடியாத்தம்

குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் வீட்டிலேயே சிலர் மதுபாட்டில்கள் விற்பதாக புகார்கள் வந்தது.

அதன் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின்பேரில் இன்று குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் குடியாத்தத்தை அடுத்த கள்ளூ குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த கனகா (வயது 52) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்