கீழக்கரையில் சட்டவிரோத மது விற்பனை

கீழக்கரையில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது.

Update: 2023-04-15 18:45 GMT

கீழக்கரை, 

கீழக்கரையில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் அதையும் மீறி பல இடங்களில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கீழக்கரை பஸ் நிலையம் அருகில் உள்ள நவீன கழிப்பறையை மது பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரக்கூடியவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். அதேபோல் புதிய பஸ் நிலையம், மீன் மார்க்கெட், வடக்குத்தெரு, சி.எஸ்.ஐ. சர்ச் அருகில், ஆட்டோ ஸ்டாண்ட், மணல்மேடு அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது. இதனால் பெண்களும், மாணவிகளும் இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கு அச்சம் அடைகின்றனர். எனவே, கீழக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டவிரோத மது விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்