அதிக விலைக்கு விற்பதாக கூறி மதுபோதையில் ரோட்டில் படுத்து ரகளை செய்த பெண்

அதிக விலைக்கு விற்பதாக கூறி மதுபோதையில் ரோட்டில் படுத்து ரகளை செய்த பெண்

Update: 2022-10-20 22:05 GMT

அந்தியூர்

அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் நடுரோட்டில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஏதோ உளறியபடி படுத்துக்கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், வாகனத்தில் அடிபட்டு தான் அவர் காயத்துடன் கிடக்கிறார் என்று நினைத்து பதறி அடித்து அங்கு சென்று பார்த்தனர். மேலும் ஒரு சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். மதுபோதையில் இருந்த அந்த பெண் பொதுமக்களிடம், டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த அளவுக்கு என்னால் பணம் கொடுத்து மது வாங்க முடியாது. மது விலையை குறைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். உடனே இதுபற்றி பொதுமக்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் அங்கு சென்றார். பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார். மேலும் அந்த பெண்ணுக்கு ஓட்டலில் உணவுகள் வாங்கிக் கொடுத்தார். அதன்பின்னர் பொதுமக்கள் அவரை பத்திரமாக வீட்டில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்