அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-09-04 19:15 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள எழுவன்கோட்டை கிராமத்தில் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள்- விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவில் அருகே உள்ள வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் சிவகங்கை சமஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் மற்றும் தென்னிலை நாட்டார்கள்-நகரத்தார்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சுவாமி -அம்பாள் மூலஸ்தானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்