நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா
நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்றுமுன்தினம் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்்தது. நேற்று காலை 7 மணி அளவில் கோவிலுக்கு வந்த அம்மனுக்கு மலர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) லட்சுமி அலங்காரம், 29-ந்தேதி சரஸ்வதி அலங்காரம், 30-ந்தேதி மதன கோபால அலங்காரம், 31-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், ஜூன் 1-ந்தேதி சேரசயன அலங்காரம், 2-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 4-ந்தேதி பெரிய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் சகல பிரார்த்தனைகளும், காவடி வைபவங்களும் செலுத்தி வழிபாடு செய்கின்றனர். 7-ந்தேதி இரவு தேரில் அம்பாள் எழுந்தருளி, நின்ற திருக்கோலத்தில் வெள்ளி குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். 16-ந்தேதி இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன், அறங்காவலர்கள் டாக்டர் எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.