தொழிலாளர்களின் பணிநேரத்தை அதிகரிப்பதை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் தர்மதாஸ், நகர பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.