முதல் முறையாக குளிர்சாதன பஸ் இயக்கம்
போளூரில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக குளிர்சாதன பஸ் இயக்கப்பட்டது.
போளூர்
போளூரில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக குளிர்சாதனை பஸ் சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாக இயக்கப்படுகிறது.
இந்த குளிர்சாதன பஸ் தொடக்க விழா இன்று மாலை போளூரில் நடந்தது. போளூர் போக்குவரத்து பணிமனை மேலாளர் எம்.பிரபாகரன் தலைமை தாங்கி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது தொழிலாளர் முன்னேற்ற சங்க ஊழியர்கள் ராஜரத்தினம், அண்ணாமலை உள்பட பலர் உடன் இருந்தனர்.
இந்த பஸ் போளூரில் தினமும் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னையில் இரவு 8.10 மணிக்கு சென்றடையும்.
மீண்டும் 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தவாசிக்கு 11.50 மணிக்கு வந்தடையும்.