எய்ட்ஸ் பாதித்த வாலிபர் தற்கொலை

எய்ட்ஸ் பாதித்த வாலிபர் தற்கொலை

Update: 2023-06-30 19:00 GMT

கே.ஜி.சாவடி

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 24 வயது வாலிபர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தார். அவருக்கு பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களை பிரிந்து கோவை வந்த அந்த வாலிபர் கே.ஜி. சாவடியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கினார். சம்பவத்தன்று அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவலின் பேரில் கே.ஜி. சாவடி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை வந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்