வரும் பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும்- வைத்திலிங்கம்

நான் அதிமுக கரைவேட்டி தான் கட்டுகிறேன் என்று வைத்திலிங்கம் கூறினார்.

Update: 2024-09-15 08:59 GMT

தஞ்சாவூர்,

தஞ்சையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அதிமுக. அதை மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். அதிமுகவின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பதுதான்.

என்னைவிட அதிமுக வரலாறு பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. சிலர் அவர்களின் கருத்துக்களை கூறலாம். அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.

அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒன்று இணையும் என முன்பு கூறியிருந்தேன். ஆனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கண்டிப்பாக அதிமுக ஒன்றிணையும். 2026- ல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. நான் அதிமுக கரைவேட்டி தான் கட்டுகிறேன்; தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்