திருவாடானையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திருவாடானையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொண்டி,
திருவாடானை, ஓரியூர் நான்குமுனை சந்திப்பில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அ.தி.மு.க. தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மாவூர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கோசலை செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் நாகநாதன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் செங்கைராஜன், இளைஞரணி செயலாளர் பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகரிகாத்தான் கருப்பையா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல், தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிவா,, மகளிர் அணி செயலாளர் சபினாபேகம், கிளைச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை அவமானப்படுத்திய செயலுக்கு காரணமான அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.முடிவில் திருவாடானை நகர் செயலாளர் பிச்சைக்கண்ணு நன்றி கூறினார்.