விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும், மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.