திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி ?

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2022-08-24 10:50 GMT

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஆறுகுட்டி. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆறுகுட்டி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் விலகிக்கொள்ள வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் ஆறுகுட்டி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்