விவசாய கருத்தரங்கு

பெரும்பாறை அருகே உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-02-11 19:00 GMT

பெரும்பாறை அருகே உள்ள தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் வினையியல் துறை பேராசிரியரும், தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியரும், தலைவருமான பாலகும்பகன் முன்னிலை வகித்தார்.

வத்தலக்குண்டு காபி வாரிய முதுநிலை தொடர்பு அதிகாரி தங்கராஜ் வரவேற்று பேசினார். கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷயின், ஆஸ்திரேலியா பருவநிலை மாறுபாடு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆடம், லூயிஸ், ஜென்னி வாங், காபி வாரிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சேகர் நாகராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் பருவ நிலை மாற்றத்தால் காபி விளைச்சலில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பட்டிவீரன்பட்டி, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பண்ணைக்காடு, பன்றிமலை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்