மழையால் சேதமடைந்த பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு
மழையால் சேதமடைந்த பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு
திருமருகல் வட்டாரத்தில் உள்ள 54 கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் 500 ஏக்கரில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையினால் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து உள்ளது. தற்போது வரை மழைநீர் வடியாத காரணத்தால் நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கும் அபாயம் உள்ளது. நேற்று திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ் மழையால் சேதமடைந்த வயல்களில் நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.