வேளாண் கருவிகள், உளுந்து விதை வழங்கும் நிகழ்ச்சி

பேராவூரணி வட்டாரத்தில் வேளாண் கருவிகள், உளுந்து விதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-03-08 01:21 IST

பேராவூரணி;

வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில், பேராவூரணி வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் பண்ணைக் கருவிகள், பேட்டரி ஸ்பிரேயர், இனக்கவர்ச்சி பொறி, சான்று பெற்ற உளுந்து விதை, தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் (பொ) ராணி தலைமை தாங்கினாா். அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கினார்.நிகழ்ச்சியில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், வேளாண்மை உதவி அலுவலர்கள் கோகிலா, தீபா, கார்த்திகேயன், கவிதா, மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்