நிலக்கடலை விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு

நிலக்கடலை விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-08-11 16:35 GMT

ராயக்கோட்டை:-

ராயக்கோட்டை அருகே நல்லூா் கிராமத்தில் நிலக்கடலை விதைப்பண்ணையில் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அருணன் ஆய்வு செய்தார். அப்போது ஓசூர் விதைச்சான்று அலுவலர் குமரேசன், வட்டார உதவி விதை அலுவலர் கணபதி உள்பட பலர் உடனிருந்தனர். பின்னர் இயக்குனர் கூறுகையில், நிலக்கடலை 100 முதல் 130 நாட்கள் வரை வளரக்கூடிய எண்ணெய் வித்துப்பயிராகும். இதனால் நிலக்கடலை விதை தேவையை பூர்த்தி செய்வது அவசியமாகிறது. வேளாண்மை துறை மூலம் விதைப்பண்ணைகள் அமைத்து மாவட்டத்தின் நிலக்கடலை விதைத்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் தரணி, கதிரி கே.1812, கே 9,VRI-8, ஆகிய ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படுகிறது. விதைப்பண்ணை அமைப்பதால் அதிக மகசூல் பெறுவதுடன், கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வதால் அதிக லாபம், ஊக்கத்தொகை கிடைக்கிறது. எனவே விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்