ரூ.27.94 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்கள்

விவசாயிகளுக்கு ரூ.27.94 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்கள்

Update: 2023-09-04 20:14 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர், இந்த நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களுக்கு 5 ஆயிரம் பவர் டில்லர்கள், களையெடுப்பான் கருவிகள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது 27 பவர் டில்லர்கள் மற்றும் 13 களைஎடுப்பான் ஆகிய எந்திரங்கள் ரூ.27.94 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டு உள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் லதா, உதவி இயக்குனர் (வேளாண்மை) ஜோஸ், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்